நடிகர் தனுஷ் நடித்த சர்வதேச படமான 'தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரைப்படம் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று தமிழில் டப் செய்யப்பட்டு நடிகர் தனுஷால் வெளியிடப்பட்டது.

Advertisment

anandh l rai

ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் பிரான்ஸ் நாட்டில் அமோக வரவேற்பை பெற்றது. கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படம் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையும், நிகோலஸ் எரேரா பின்னணி இசையும் அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், சர்வதேச படத்தில் பணியாற்றிய தனது அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் உரையாடிய நடிகர் தனுஷ், ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட பாலிவுட்டை படங்களை தொடர்ந்து தந்து அடுத்த பாலிவுட் படம் பற்றிய தகவலை பகிர்ந்துக் கொண்டார்.

Advertisment

இதன் காரணமாக இயக்குநர் ஆனந்த் எல்.ராய்-ஐ சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராம்குமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இது தவிர ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.