Skip to main content

ஷூட்டிங்கிற்கு வந்த புது மாப்பிள்ளை... தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ்!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடித்து முடித்த கையோடு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடரஜான், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 
 

dhanush

 

 

இதில் தனுஷுடன் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் இடையேதான் யோகிபாபு மஞ்சுபார்கவி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக கடந்த ஃபிப்ரவரி ஐந்தாம் தேதி குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலில் திருமணம் செய்துகொண்ட யோகிபாபு அதன்பின் ட்விட்டரில் போட்டோ வெளியிட்டு தனக்கு திருமணம் நடைபெற்றதை தெரிவித்தார். விரைவில் சென்னையில் அனைத்து பிரபலங்களையும் அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி வைப்பேன் என்றும் அறிவித்தார்.
 

day night


திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் திருநெல்வேலியில் நடைபெறும் கர்ணன் பட ஷூட்டிங்கில் மீண்டும் கலந்துகொண்ட யோகிபாபுவுக்கு தனுஷ் தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். படக்குழுவினர் யோகிபாபுவின் திருமணத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மஞ்சும்மெல் பாய்ஸ் போல அல்ல... சல்யூட் சார்” - யோகி பாபு புகழாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
yogi babu appreciate prithviraj aadujeevitham

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, யோகி பாபு இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

yogi babu appreciate prithviraj aadujeevitham

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “இன்னும் படத்தின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. அந்த வலி நிறைந்த பயணம். இப்படம் சினிமா பிரியர்களுக்கு விருந்து. இது மஞ்சும்மெல் பாய்ஸ் போல சீட் நுணியில் பார்க்கும் சர்வைவல் த்ரில்லர் அல்ல. இது ஒரு எமோஷனல் சர்வைவல் டிராமா. அதனால் அதற்கு தகுந்த வேகத்தில் நகரும். பிரித்விராஜ் சார் இந்த படத்தின் உயிர். மம்மூட்டி, மோகன்லால் நடிகர்களுக்கு பிறகு பிரித்விராஜுடைய நடிப்பு இன்னும் பல வருடங்கள் மறக்க முடியாததாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் சல்யூட் சார்” என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே மாதவன், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அவர்களுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.