Dhanush film release get Postponed ; New information released

செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28-ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜூலை 1-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என உதயநிதி அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, படத்தின் இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment