Dhanush film the gray man hit on Netflix

ஹாலிவுட்டில் தனுஷ், கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தி கிரே மேன்'. இப்படத்தை 'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் சீக்குவல் அடுத்தடுத்த பாகங்களுக்கான ஆரம்பகட்ட பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக ரூசோ பிரதர்ஸ் அறிவித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் ஐந்து படங்களில் 'தி கிரே மேன்' படம் ஐந்தாவது இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. முதல் இடத்தில் 'ரெட் நோட்டீஸ்' (148.72 மில்லியன் மணிநேரம்), இரண்டாவது இடத்தில் 'டோன்ட் லுக் அப்' (111.03 மில்லியன் மணிநேரம்), மூன்றாவது இடத்தில் 'தி ஆடம் ப்ராஜெக்ட்' (92.43 மில்லியன் மணிநேரம்), நான்காவது இடத்தில் 'தி கிஸ்ஸிங் பூத் 3' (90.86 மில்லியன் மணிநேரம்) ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து 'தி கிரே மேன்' - 88.55 மில்லியன் மணிநேரம் (முதல் மூன்று நாட்களில்) ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Advertisment

இதனுடைய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், 'தி கிரே மேன்' படப்பிடிப்பின் போது தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.