/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1489.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையொட்டி அண்மையில் இப்படத்தின் ட்ரைலர்வெளியீட்டுவிழா நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ், எதுமாஸ் என்று நெகிழ வைக்கும் விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், உங்களையெல்லாம் இப்படி பார்த்து ஒன்றைவருசமாச்சு. சரி ஒன்றை வருடம் கழித்து என் படம் வருகிறது. அது மாஸான படமாகவந்த நல்ல இருக்கும்னு சொன்னாங்க. சாரி மாஸ்ன்னா என்ன? ஒரு ஹீரோ பத்து பேர அடிச்சிட்டு கெத்தா நின்னா அது மாஸ், ஒரு ஹீரோ செஞ்சிருவன்னுபஞ்ச் டயலாக்பேசுனாஅது மாஸ், இல்ல கடைசி நேரத்தில் ஆபத்துல இருக்குறவங்களகாப்பாத்துனா மாஸ்.
ஆனால் இது எல்லாத்தையும் தாண்டி ஒரு மாஸ் இருக்கு. அது என்னென்ன நம்ம குழந்தையா இருக்கும்போது நம்மள வளர்க்கிறஅப்பா அம்மா, வயசானபிறகு அவங்க குழந்தையாமாறிடுறாங்க. அவங்களநல்லபடியா குழந்தையா பார்த்துக்கிட்டா அது மாஸ், கடைசி வரைக்கும்செய்த நன்றியை மறக்காமஇருந்தா அது மாஸ், நம்ம மேல தப்பு இல்லைன்னா கூட ஒரு பிரச்சனைசரியாக வேண்டும் என்று இறங்கி வந்து மன்னிப்புகேட்ட அது மாஸ், நாம நண்பன் உதவின்னு கேட்டஉடனே கைல காசு இல்லனாகூட கழுத்துல இருக்குற செயினைஅடமானம் வைத்து காசு கொடுத்தாஅதுமாஸ். அப்படிபார்த்தாதிருச்சிற்றம்பலம்ஒரு பயங்கரமான மாஸ் படம்தான்" என்றார். இதை கேட்ட அரங்கத்தில் இருந்த தனுஷ் ரசிகர்கள் கைதட்டி கரகோஷத்தை எழுப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)