கடந்த வருடம் பொங்கலுக்கு சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. இதனை அடுத்து கடந்த வருட தீபாவளிக்கு செல்வராகவன் கூட்டணியில் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பட ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டு படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

Advertisment

dhanush

இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். பின்னர், தயாரிப்பு குழுவும் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையாக காத்திருக்கும்படி வேண்டுகோள் விட்டது. இதனை அடுத்து என்.ஜி.கே படம் மே 31 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் , “இன்று முதல் என்.ஜி.கே. படம். மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, செல்வராகவன் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற அற்புதமான நடிகர், உங்களைப் போன்ற புத்திக்கூர்மையான இயக்குநர் இணைவதைத்தான் எதிர்பார்த்திருந்தோம்” என ட்விட்டரில் தனுஷ் பதிவிட்டுள்ளார்.