வேட்டி சட்டையில் மாஸாக என்ட்ரி கொடுத்த தனுஷ்!

Dhanush dons traditional Veshti Netflix The Gray Man premiere Mumbai

'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 22-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பு குறிப்பிட்ட சில திரையரங்குகளில் 15 ஆம் தேதி முதல் சிறப்பு கட்சி திரையிடப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள சில இடங்களில் தி கிரே மேன் படத்தின் பிரீமியர் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட நிலையில் நேற்று மும்பையில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதற்காக தி கிரே மேன் படக்குழுவினர் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ள நிலையில் நடிகர் தனுஷ் பிரீமியர் காட்சிக்கு வேட்டி சட்டையில் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

actor dhanush hollywood
இதையும் படியுங்கள்
Subscribe