Dhanush donates rs 25 lakhs to Kerala CM Relief Fund for Wayanad

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி இரவு கடும் மழை பெய்த நிலையில், 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக்கிராமத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால் மூன்று கிராமத்தில் வசித்த மக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது.

மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணுக்குள் புதைந்தும் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை , இந்திய ராணுவம் என அனைத்து துறைகளும் ஒன்றாக சேர்ந்து மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தங்களது குடும்பம் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு இயக்கங்களில் இருந்து நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் பலரும் இணைந்து அம்மாநில அரசு அறிவித்துள்ள (keralacmdrf@sbi) யூ.பி.ஐ. மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி, உதவி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தமிழ்த் திரைப்பிரலங்களில் விக்ரம் ரூ. 20 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ. 50 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், நயன்தாரா - விக்கேஷ் சிவன் தம்பதி ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினர். மேலும் மலையாள திரையுலகிலிருந்து மோகன்லால் ரூ.3 கோடி மற்றும் மம்மூட்டி ரூ.20 லட்சமும், அவரது மகன் துல்கர் சல்மான் ரூ.15 லட்சமும் நன்கொடை வழங்கினர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலிருந்து நடிகர்கள் சிரஞ்சீவி - ராம்சரண் இருவரும் இணைந்து ரூ.1 கோடி மற்றும் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது மற்றொரு தெலுங்கு நடிகரான பிரபாஸ், கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளார்.