/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/105_33.jpg)
2017 ஆம் ஆண்டு வெளியான 'ப.பாண்டி' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த தனுஷ், அதைத் தொடர்ந்து 'நான் ருத்ரன்' என்ற தலைப்பில் ஒரு படம் தொடங்கியதாகவும் அதில் நாகர்ஜுனா, அதிதி ராவ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து, பின்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து தனது 50வது படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுவதும் சமீபத்தில் முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து தனுஷ் மூன்றாவது முறையாக அவரது அக்கா மகனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதாகவும் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் கதாநாயகியாக அனிகா நடிப்பதாகவும் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதோடு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிகின்றன.இதையடுத்து ராதிகா சரத்குமார், தனுஷ் இயக்கும் படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறினார். ஆனால் படக்குழு அறிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் தனுஷ் மூன்றாவதாக இயக்கும் படம் அவரது, சொந்த நிறுவனமான வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த அறிவிப்பு வருகிற 24ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
#DD3pic.twitter.com/IgXDIDReca
— Dhanush (@dhanushkraja) December 22, 2023
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)