Advertisment

ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ள தனுஷ் படக்குழு ; வெளிவந்த புது தகவல்

Dhanush crew decides on release date; New information released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். மாறன் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

actor dhanush anirudh Nithya menon priya bhavani shankar Raashi Khanna sun pictures.
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe