dhanush

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்த கையோடு, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் 'திருச்சிற்றம்பலம்' படத்தைத் தொடங்கினார் நடிகர் தனுஷ். இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இயக்குநர் மித்ரன் ஜவஹரின் முந்தைய படங்களான ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ போன்று இப்படமும் காதல் திரைப்படமாக உருவாகிவருகிறது.

Advertisment

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவருகிறது. இந்த நிலையில், 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் சம்மந்தப்பட்ட அனைத்து காட்சிகளுக்குமான படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிற நடிகர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அதனையும் விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அடுத்தாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'நானே வருவேன்' படத்தில் கவனம் செலுத்த தனுஷ் முடிவெடுத்துள்ளாராம்