dhanush captain miller shooting issue thenkasi District Collector order

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில்'ஆர்.ஆர்.ஆர்' படப் பிரபலமானஅமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் இணைந்துள்ளதாக அறிவித்தது.

Advertisment

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரப் படப்பிடிப்பின் போது ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவுக்கு எதிராகப் புகார் மனு கொடுத்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இந்த நிலையில், மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்த,தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாம். இதன் அடிப்படையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பபை அப்பகுதியில் நடத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.