அடுத்த அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் படக்குழு

dhanush in captain miller new update released

தனுஷ் தற்போது 'நானே வருவேன்' மற்றும் 'வாத்தி' படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் 'நானே வருவேன்' வருகிற 29ஆம் தேதியும் வாத்தி படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றிய அறிவிப்பு வெளியாகிவருகிறது. அந்த வகையில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். அதன் படி நிவேதிதா சதிஷ் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நிவேதிதா சதிஷ், சில்லுக்கருப்பட்டி, உடன்பிறப்பே உள்ளிட்ட சில படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

actor dhanush Captain Miller director arun matheswaran
இதையும் படியுங்கள்
Subscribe