Advertisment

பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு

dhanush captain miller movie pooja held today

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனிடையே தனுஷ் சில தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில்'கேப்டன் மில்லர்' என குறிப்பிட்டு புது லுக்கில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்காக பெரிய கிராமம் போன்று செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

இதனிடையே தனுஷ் 'நானே வருவேன்' மற்றும் 'வாத்தி' படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் 'நானே வருவேன்' வருகிற 29ஆம் தேதியும் வாத்தி படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது .

Captain Miller priyanka mohan director arun matheswaran actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe