Advertisment

"மரியாதை தான் சுதந்திரம்" - போர்க்களத்தில் தனுஷ்

dhanush captain miller firest look released

Advertisment

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களை படக்குழு எதிர்கொண்டு இப்போது முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதமும் டீசர் அடுத்த மாதமும் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 1940களின் பின்னணியில் இப்படம் உருவாகுவதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு போர்க்களத்தில் எல்லாரும் இறந்து கிடக்க, அதற்கு நடுவில் தனுஷ் ரத்தக்கறையுடன் கையில் துப்பாக்கியுடன் ஓய்ந்து போய் நிற்பது போல் நிற்கிறார்.

இப்போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், "மரியாதை தான் சுதந்திரம்" என குறிப்பிட்டுள்ளார். இப்போஸ்டர் தனுஷ் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இப்படம் இந்தாண்டுக்குள் திரையரங்கிற்கு வந்துவிடும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது. ரிலீஸ் தேதியை டீசருடன் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

actor dhanush Captain Miller director arun matheswaran
இதையும் படியுங்கள்
Subscribe