dhanush

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படத்தை, திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த ரசிகர்கள், ஓடிடி வெளியீடு காரணமாக அதிருப்தியில் உள்ளனர். படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பின்போது படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. நடிகர் தனுஷ், இந்த டீசர் குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் எதுவும் பதிவிடாததையடுத்து, தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் - தயாரிப்பாளர் என மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது எனத் தகவல்கள் பரவின.

Advertisment

இந்த நிலையில், இன்று (19.03.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கார்த்திக் சுப்பராஜூக்கு நடிகர் தனுஷ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக் சுப்பராஜ். நான் இணைந்து பணியாற்றிய சிறந்த இயக்குநர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து அசத்துங்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment