மீண்டும் அமெரிக்கா சென்ற தனுஷ்... இணையத்தில் ட்ரெண்டாகும் 'தி கிரே மேன்' படத்தின் புகைப்படம் 

Dhanush back to shooting Hollywood film The Gray Man

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார்.அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் என அறியப்படும் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கிவருகின்றனர். இப்படத்தில்கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிகர் தனுஷும் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற தனுஷ், அங்கு தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திருப்பினார்.

alt="https://www.youtube.com/watch?v=UIqTuh5bccU" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="881aacfa-b7a9-49db-aee8-54fcea68e48f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_11.jpg" />

இந்நிலையில், 'தி கிரே மேன்' படத்தின் சில காட்சிகளைப் படமாக்குவதற்காக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள நடிகர்தனுஷ், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஒருவார காலத்தில் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் அவர், தனது மற்ற பட வேலைகளில் கவனம் செலுத்துவார் எனக்கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ், இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'அத்ரங்கி ரே' படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்'படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில்'அத்ரங்கி ரே' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor dhanush
இதையும் படியுங்கள்
Subscribe