/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/144_5.jpg)
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்தும், கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்கி வருகின்றன. சமீபத்தில் பொங்கல் தினத்தையொட்டி வெளியான படங்களுக்கும் ரசிகர்கள் வரவு எதிர்பார்த்த அளவில் இருந்ததால், ‘ஜகமே தந்திரம்’ படத்தினை திரைக்குக் கொண்டு வரும் பணிகளில் தயாரிப்பு தரப்பு முனைப்பு காட்டி வருகிறது. படம் காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன் கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலருக்குநல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)