dhanush and Kasthuri raja has sent lawyer notice madurai couples

Advertisment

மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கைரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்துகஸ்தூரிராஜாதங்களைகொலை செய்யமுயற்சிப்பதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவுகளை பெற்று விட்டதாகவும் கூறி மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும்நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் கதிரேசன் - மீனாட்சி இந்த குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ரூ. 10 கோடி நஷ்ட ஈடுகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும்என்று தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜாதரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள கதிரேசன் - மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்தவிதமானநோட்டீஸும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.