Skip to main content

நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் திருப்பதியில்  தரிசனம்...

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

ஜகமே தந்திரம் ஷூட்டிங்கிற்கு பின்பு மாரி செல்வராஜ் படமான கர்ணன் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வந்தார் தனுஷ். இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் முடிக்கப்பட்டு மூன்றாம் கட்ட ஷூட்டிங்கிற்காக ஒரு நீண்ட இடைவேளை எடுத்துள்ளது படக்குழு. 
 

dhanush

 

 

மேலும்  கடந்த வாரம் ஆனந்த எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹிந்தி படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டுவிட்டது. இப்படி  படு பிஸியாக ஷூட்டிங்கில் சுற்றி வரும் தனுஷ் அவ்வப்போது கோவில்களுக்கு சென்று பிராத்தனைகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நேற்று அதிகாலை 2:30 மணிக்கு நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் திருமலைக்கு வந்தார். அதன்பின் விஐபி தரிசனத்தில் காலை சாமி தரிசனம் மேற்கொண்டார். தரிசனம் முடித்துத் திரும்பிய அவரை ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து தேவஸ்தான அதிகாரிகள் சாமி பிரசாதத்தை கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட தனுஷ் கோவிலைவிட்டு வெளியே வந்ததும் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு சென்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

செல்பி எடுக்க முயன்று விபரீதம்; சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Tragedy trying to take a selfie; One killed after being attacked by a lion

அண்மையில் திருப்பதியில் காட்டு வழியாகச் சென்று சிறுமி புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது திருப்பதியில் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பார்வையாளர் ஒருவர் சிங்கம் தாக்கி உயிரிழந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சுந்தரி, குமார் தெங்கள்பூர் உள்ளிட்ட இரண்டு ஆண் சிங்கங்களும், ஒரு பெண் சிங்கமும் உள்ளது. பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு நாளும் சிங்கங்கள் பாதுகாப்பு கூண்டில் இருந்து காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து முப்பது வரை திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்து வளாகத்திற்குள் இன்று திறந்துவிடப்பட்டது. அப்போது ஒருவர் செல்பி எடுப்பதற்காக முயன்றபோது சிங்கம் நடமாடும் வளாகத்திற்குள் தவறி விழுந்தார். அவரது ஆடைகளைக் கடித்துக் குதறிய சிங்கம் அவரது கழுத்தையும் கடித்துக் குதறியது. இதைப் பார்த்த வெளியே இருந்த மற்ற பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு மரத்தில் ஏறித் தப்ப முயன்றபோதும்  விடாத சிங்கம் அவரைத் தாக்கிக் கொன்றது.

இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிங்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஊழியர்கள் அதனைக் கூண்டில் அடைத்தனர். அந்த நபரின் உடல் கைப்பற்றப்பட்டது. சிங்கத்தின் தாக்குதலால் உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் குருஜாலா பிரகலாதா என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.