dhanush and his son yathradhanush photos goes viral social media

Advertisment

கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இதனை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கையின் மூலம் தனித்தனியே வெளியிட்டனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இருவரும் பிரிந்து தங்களது பணிகளைக் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ரா தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். தந்தை மகன் இருவரும் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை 'நானே வருவேன்' படத்தில் தனுஷுடன் சேர்ந்து அவரது மகன் யாத்ரா தனுஷும் நடிக்கிறாரா என்ற கோணத்தில் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.