Advertisment

ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ்

dhanush and anirudh watched Thiruchitrambalam FDFS

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைபெற்று வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f7d67666-b6c5-40c5-91d1-3b7d7d9ff942" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Thiruchitrambalam-Movie--Article-Ad-size-500-X-300_1.jpg" />

Advertisment

இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்துள்ளனர். சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு திருச்சிற்றம்பலம் படத்தின் அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் தனுஷ் மற்றும் அனிருத் சேர்ந்து பார்த்துள்ளனர். மேலும் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் தனுஷை பார்த்ததும் கரகோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

anirudh actor dhanush Thiruchitrambalam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe