மீண்டும் உருவான வெற்றி கூட்டணி!

dhanush anirudh

தனுஷ் நடிப்பில் உருவான '3' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இன்று அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்து அவர் ஒப்பந்தமான படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்து, தனுஷ் நடிக்கும் படத்தில் அனிருத்தான் இசையமைப்பாளர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மாரி' படத்திற்குப் பின் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

anirudh DHANUSH
இதையும் படியுங்கள்
Subscribe