Advertisment

மகன்களுடன் தனுஷ், ஐஸ்வர்யா; வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

dhanush and aishwarya rajinikanth photos goes viral

கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இதனை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கையின் மூலம் தனித்தனியே வெளியிட்டனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இருவரும் பிரிந்து தங்களது பணிகளைக் கவனித்து வருகின்றனர். இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது இரு மகன்கள் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனதுமகன் யாத்ரா பள்ளி விழாவில் விளையாட்டின்கேப்டனாக பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் மகன்களுக்காக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ் தனது குடும்பத்தினருடன் இடம்பெற்றுள்ளார்.

Advertisment

aishwarya rajinikanth actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe