dhanush aishwarya rajinikanth applied divorce in court

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். அதன் படி தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

Advertisment

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக், படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கினார். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து சித்தார்த்தை வைத்து ஒரு படமெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisment