திருமணமாகி பதினெட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாஆகியோருக்குயாத்ரா,லிங்காஎன இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த2022ஆம்ஆண்டு ஜனவரி 17ஆம் தேதிதனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ மனமில்லாமல் பிரிய முடிவெடுத்து தங்களது சமூகவலைதளங்கள் மூலமாகஅறிக்கை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து இருவரும் தங்களின் பணிகளில் கவனம் செலுத்தி வந்ததோடு மகன்களோடும்நேரத்தைசெலவிட்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து இருவரும் கடந்தஏப்ரல்மாதம் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்து, 2004ஆம் ஆண்டு நடந்ததிருமணத்தைசெல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி தனுஷ், ஐஸ்வர்யாஆகியோரைகடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வருகையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும்ஆஜராகாமலிருந்தநிலையில், விசாரணை அக்டோபர் 19ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும்ஆஜராகாமலிருந்ததால்விசாரணை இன்று(02.11.2024) ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதிஎஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றோடு மூன்றாவது முறையாக தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விசாரணைக்குஆஜராகாததால், நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வருகிற நவம்பர் 21ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.