dhanush aishwarya divorce case update

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இது திரையுலகில் பரபரப்பையும், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து இருவரும் அறிவித்தது போல், தனித்தனியே வாழ்ந்து வந்தனர். மேலும் அவரவர் திரை பயணங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இவர்களது இரு மகன்களும் தனுஷ் பட விழா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட விழாவிலும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரத்த அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத்தள்ளிவைத்தார்.