தெலுங்கில் ரீமேக்காகும் தனுஷின் அசுரன்... அங்கு ஹீரோ யார் தெரியுமா?

கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வெளியான படம் அசுரன். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினார்கள். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.

asuran

தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் வியாபாரம் 100 கோடியைக் கடந்துள்ளது, தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் சாதனைப் புரிந்தது.

இந்நிலையில், அசுரன்படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகியுள்ளது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டகுபாட்டி நடிக்கவுள்ளார். இது தொடர்பாக சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், அசுரன் தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

kaithi

அசுரன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்போகும் இயக்குனர் யார் என்பதை இன்னும் படக்குழுவினர் முடிவு செய்யவில்லை.

asuran DHANUSH
இதையும் படியுங்கள்
Subscribe