/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/261_22.jpg)
தனுஷ் இயக்கி மற்றும் நடித்து கடந்த 26ஆம் தேதி வெளியான திரைப்படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தனுஷின் 50வது திரைப்படம் என்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படம் வெளியாவதற்கு முன்பு, தனுஷ் தனது குடும்பத்தினருடன் தேனியில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்தார். பின்பு இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, படத்தின் ‘ஓ ராயா..’பாடல் வரிகளை குறிப்பிட்டிருந்தார். மேலும் “உங்கள் வேர்களுடன் இணைந்திருப்பது அமைதி” என்றும் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனுஷின் பிறந்தநாளான நேற்று (28.07.2024) சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை பகிர்ந்து படக்குழு வாழ்த்து தெரிவித்திருந்தது . இந்நிலையில் ஆடி கிருத்திகை தினமான இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் தனது இரண்டு மகன்களுடன் வழிபட்டார். இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , “பார்வையாளர்கள், திரைத்துறை நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் எனது ஆதரவுத் தூண்களான ரசிகர்களாகிய நீங்கள் பொழிந்த எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இதுதான் எனக்கு சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)