'கர்ணன்' டீசர் அப்டேட் கொடுத்த தனுஷ்!

karnan

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ca17fc07-c825-4084-a68c-b58a16b387a7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_16.png" />

படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் 9-ஆம் தேதி படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க...’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இவ்விரு பாடல்களுக்கும் கிடைத்த வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கர்ணன் டீசர் விரைவில்" எனப் பதிவிட்டுள்ளார். தனுஷின் பதிவைக் கண்டு உற்சாகமான தனுஷ் ரசிகர்கள், இத்தகவலை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.

actor dhanush
இதையும் படியுங்கள்
Subscribe