Advertisment

கேங்கில் இணைந்த 2 நடிகர்கள் - ராயனாக தனுஷ்

dhanush 50 first look update title as raayan

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதைத்தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இதில் தனுஷின் 50வது படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட மூன்று பேரும் இடம்பெற்றிருக்கின்றனர். மூன்று பேரும் கையில் ஆயுதங்களோடு கோபமாக நின்றுகொண்டிருக்கின்றனர்.

Advertisment

மேலும் ரத்தக் கறையோடுகாணப்படுகின்றனர். இப்படத்திற்கு ‘ராயன்’ எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் தனுஷ் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Raayan sundeep kishan kalidas jayaram actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe