/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/108_9.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாறன்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள்ஏறக்குறைய படமாக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், நடிகர் தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் 44வது படமாக உருவாகவுள்ள இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் நீண்ட நாட்களாகவே மித்ரன் ஜவஹர் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகிவருகிறது.
‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ திரைப்படங்களைப் போன்றே காதல் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில், நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் என இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வாரத்தின் இறுதியில் பூஜையுடன் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் 'அருண்விஜய் 33' படத்தில் நடித்துவருவதால், முதலில் தனுஷ் -ராஷி கண்ணா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. 'அருண்விஜய் 33' படப்பிடிப்பை நிறைவுசெய்துவிட்டு, ‘தனுஷ் 44’ படக்குழுவினரோடு பிரியா பவானி சங்கர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)