dhanush 3 movie re released andhra and telungana state

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 3. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் மிக பெரிய ஹிட்டடித்ததோடு, தனுஷின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் தமிழ் மொழி தாண்டி பிற மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

Advertisment

இந்நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு 3 படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தனுஷின் 3 படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் காலை முதல் 200-க்கும் அதிகமான காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.