Skip to main content

'பொன்னாடை வேண்டாம்...! அதற்காகும் செலவை இதற்கு பயன்படுத்தலாம்' - கலை புலி தாணு சொன்ன யோசனை

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
thanu

 

சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி என்கிற மரகதவள்ளி’ என்ற திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் கதிரேசன், முன்னாள் பெஃப்சி தலைவர் வி சி குகநாதன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் விஜயமுரளி, இயக்குநர் ராஜேஷ், பின்னணி பாடகர் வேல்முருகன், படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஜெகதீஷ், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

அப்போது விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில்.... "குறைந்த செலவில் மிகவும் நேர்த்தியாக இந்த 'மேகி' படம் தயாராகியிருக்கிறது. இதற்காக பாடுபட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டுகிறேன். தற்போதைய காலகட்டத்தில் சிறிய பட்ஜெட்டில் படமெடுக்க நினைக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கு இந்த படத்தின் இயக்குநரைப்போல் இயக்குநர்கள் கிடைத்தால் அது பெரிய வரபிரசாதம். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் 'மேகி' போன்ற படத்தின் விழாக்களில் வருகைத் தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிப்பதையும் சிக்கனம் கருதி தவிர்க்கலாம். அதற்காகும் செலவை படத்தின் விளம்பரங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை இங்கே ஒரு ஆலோசனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்