Advertisment

தனுஷ் தொடர்பான வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

dhansuh madurai kathiresan meenakshi case update

Advertisment

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்து கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவுகளை பெற்று விட்டதாகவும் கூறி தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு கஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் தரப்பு இந்த குற்றச்சாட்டுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினருக்குநோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. ஆனால் கதிரேசன் - மீனாட்சி தரப்பு எங்களுக்கு இது குறித்து எந்தவிதமான நோட்டீஸும் வரவில்லை என மறுத்தனர்.

dhansuh madurai kathiresan meenakshi case update

Advertisment

பிறகு கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரிய வழக்கில் தனுஷ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில், தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தனுஷ், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன் தான் என்ற முடிவுக்கு வரவில்லை. மேலும் தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர்நீதிமன்றஉத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் என் வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்திடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த மனு நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தவறான உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் இது ஒரு அபத்தமான வழக்கு என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

madurai actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe