இரண்டு முறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ், நந்திதா நடிக்கும் கபடதாரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் முதல்முறையாக இயக்கவும் உள்ளார்.

Advertisment

dhana

சமீபத்தில் இதுகுறித்து அவர் பேசும்போது.... ''நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது, அந்த படங்களின் கதை விவாதங்களிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்று தந்தன. எனக்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கு சரியான நேரம் இப்போதுதான் அமைந்து இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக நானும், என் குழுவினரும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு இருந்தோம். சில நடிகர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் என் கதையை சொன்னபோது, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறேன். இது ஒரு திகில் படமாகும். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.