சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக் கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடிகண்டுபிடித்துகொலை செய்யும் ஒருசைக்கோவின்பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்தசைக்கோவிடமிருந்துஇருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடூரமாக அந்தசைக்கோகொலை செய்தானா? என்று திகிலுடன் சமீபத்தில் வந்த ராட்சசன், போர் தொழில் படங்களின் வரிசையில் விறுவிறுப்பாகசஸ்பென்ஸ்திரில்லருடன்மிகபிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் சூரியன்.ஜி
ராம்எண்டர்டைனர்ஸ்சார்பில் பிரகாஷ் S.V தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாரித்துள்ளஇப்படத்தைசூரியன்.ஜி இயக்கியுள்ளார்.ராஜீவ்கோவிந்த்மற்றும் அபிஷேக் ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்கயுக்தாபெர்வி,சித்தாராவிஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.வில்லன்களாகஹரிஷ்பெர்டி, நடிக்கஅஷ்ரப்குருக்கள்,சோபாபிரியா, குழந்தை நட்சத்திரங்களானபெஹ்மின்,பர்ஹான்,ஜான்வி,சினேகல்,ஆதித்யன்ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு குடகு மலை,கே ஜி எஃப், ஓசூர், வயநாடு போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரியில்வெளிவரத்திட்டமிடப்பட்டுள்ளது.