"சட்டமன்றத்துல துப்பாக்கி வேணுமான்னு கேட்டாங்க, நான் அருவா பார்ட்டின்னு சொல்லிட்டேன்" - நெப்போலியன் ஜாலி பேட்டி 

actor napoleon

நெப்போலியன்... உலக அளவில் இந்தப் பெயரை சொன்னால், வேறு நினைவுகள் வரும். தமிழ்நாட்டில் இந்தப் பெயரைசொன்னால் நினைவுக்கு வருவதுநெடுநெடுஉயரம், முரட்டு மீசை, வீரம், கிராமத்துப் பேச்சுஆகியவைதான். நடிகர்நெப்போலியனுக்கு அடையாளமானவை இவை. அப்படி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தஇந்த சீவலப்பேரி பாண்டி இன்றுஅமெரிக்காவில் ஹாலிவுட்படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் OTT ரிலீசாக வெளிவர இருக்கும்Devil's Night: Dawn of the Nain Rougeபடம் குறித்தும்மேலும் பல விஷயங்கள் குறித்தும்அவரிடம் பேசினோம். அப்போது, பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு பகுதி...

"என்னதான்அமெரிக்கா, ஹாலிவுட்னு வந்தாலும் நம்ம எப்பவும் பழைய நெப்போலியன்தான். அதுதான் நம்ம வாழ்க்கைமுறை. 2001ல முதல் முதல்லஎம்.எல்.ஏவாகிசட்டமன்றத்துக்குப் போனேன். முதல் மாச சம்பளம் வாங்க கையெழுத்து போட போனப்ப 'சார், நீங்க கன்வாங்கிக்கலையா?'னு கேட்டாங்க. எனக்கு சரியா கேக்கல. 'என்னது பன்தர்ராங்களா?'ன்னு கேட்டேன்.'பன் இல்ல சார், கன், துப்பாக்கி'ன்னு சொன்னாங்க. எம்.எல்.ஏக்கள், தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்கிக்கொள்ளலாம் என்றுசொன்னார்கள். வெளியே மூனுலட்ச ரூபாய்க்கு கிடைக்கும் துப்பாக்கி அங்கஒன்றரை லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும்னுசொன்னாங்க. 'சரி, கொடுங்க'ன்னேன். 'லைசன்ஸ்காட்டுங்க'ன்னு கேட்டாங்க. 'நான் எங்கேங்க லைசன்ஸ் வச்சுருக்கேன்? நமக்குஎதுக்குங்க துப்பாக்கி லைசன்ஸ்? நம்மல்லாம் அருவா பார்ட்டிங்க. ஊர்லஎதுன்னாலும் அருவா எடுத்து பழக்கப்பட்டவங்க' என்றுசொல்லி துப்பாக்கி வாங்காம வந்தேன்.

இப்போ அமெரிக்காவில் இருப்பதால நண்பர் டெல் கணேசன் மூலமா இந்த வாய்ப்பு வந்தனாலஹாலிவுட் படம் நடிக்கிறோமேதவிர நம்ம எப்போவுமே மண் மணம் மாறாத ஆளுதான். எப்பவும் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசாதான் நம்ம கேரக்டர்."

actornapoleon devilsnight hollywood napoleon
இதையும் படியுங்கள்
Subscribe