devilan movie to attempt worlds record

அறிமுக இயக்குநர் பிக்கய் அருண் இயக்கத்தில் சீகர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘டெவிலன்’. இதில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க, நாயகிகளாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஃபெடரிக், ஆனந்தி விஜயகுமார், குழந்தை நட்சத்திரம் டோர்த்தி எஸ்.ஜே, கிருதேவ்.கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கமல்ஜித் சிங் இசையமைக்கிறார்.

இப்படத்தை 48 மணி நேரத்தில், படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் படக்குழுவினர் முயற்சி எடுத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு (மே 29) மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெறும். 3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள். இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற உள்ளது.

இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது புதிய முயற்சி மற்றும் 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முழுமையாக முடித்து திரையிடும் சாத்தியக்கூறுகள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள். இயக்குநர் பிக்கய் அருண் பேசுகையில், “7 வருடங்களாக மீடியாவில் பணியாற்றியிருக்கிறேன். அதை சொல்வதற்கு நான் பெருமைக் கொள்கிறேன். இரண்டு தொலைக்காட்சிகளில் நேர்காணல் செய்யும் பணியை செய்து வந்தேன். அந்த விசயங்கள் இப்போது என் முன்பு நிற்கும் போது எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. எனவே பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இதை நிச்சயம் செய்து முடிப்போம்” என்றார்.