/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2572a0f5-1293-4ca4-b653-b5473b6f754c.jpg)
நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்குப் பணி புரியும் உதவியாளர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.
மேலும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விஷாலின் தேவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் செயலாளருமானஹரிகிருஷ்ணன் செய்துவருகிறார்.இந்நிலையில், புரட்சித் தளபதி விஷாலின் தேவி அறகட்டளையின் சார்பில் அண்ணாநகர் துணை ஆணையர் திரு. எஸ்.பி.முத்துசாமி அவர்களிடத்தில் முகக்கவசம், கையுறைகள், சானிடைசர் நேற்று வழங்கப்பட்டது.
Follow Us