devi sri prasad gaves update about the good bad ugly movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித் நடித்தார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்து வந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதுகுறித்து தேவி ஸ்ரீபிரசாத் அண்மையில் பேசியிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “குட் பேட் அக்லி படத்தில் ஒரு பாட்டு பண்ணியிருக்கோம். அந்தப் பாடலுக்கு அஜித், பயங்கரமா டான்ஸ் ஆடி இருக்காரு. அத பார்த்து நான் உண்மையிலே மிரண்டுட்டேன்” எனக் கூறினார். இந்தப் படம் வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என ஏற்கெனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.