Advertisment

''கடவுள் அவர் குடும்பத்திற்குப் பலம் அளிக்கட்டும்'' - தேவி ஸ்ரீ பிரசாத் வருத்தம்!

gsg

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், சல்மான் கானின் ஆஸ்தான இசையமைப்பாளருமான வாஜித் கான் காலமானார். 42 வயதான அவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள செம்பூரின் சூரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் இன்று காலை காலமானார்.

Advertisment

வாஜித் கான் மறைவுக்குப் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மறைந்த வாஜித் கானுக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''வாஜித் கானின் (வாஜித்பாய்) திடீர் மறைவு பற்றிய செய்தியால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைத்தேன். சீக்கிரம் எங்களைப் பிரிந்துவிட்டீர்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கல். கடவுள் அவர் குடும்பத்திற்குப்பலம் அளிக்கட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

Devi Sri Prasad
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe