‘ஊ சொல்றியா மாமா...’; காப்பியடித்த ஹாலிவுட் பாடகி - வழக்கு தொடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்

புதுப்பிக்கப்பட்டது
22

அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘புஷ்பா’. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இடம்பெற்றிருந்த ‘ஊ அண்டவா மாவா’(தமிழில் ‘ஊ சொல்றியா மாமா...’) பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதில் சமந்தா கவர்ச்சியான குத்தாட்டம் போட்டிருந்தது பாடல் ஹிட்டாக முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடித்தீர்த்தனர். அதே சமயம் பாடலின் வரிகள் ஆண்களைத்தவறாகக் கூறுவதாக சில விமர்சனங்களும் எழுந்தது.  

இந்த நிலையில் இப்பாடல் துருக்கி நாட்டு பாடகியால் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “ஊ சொல்றியா பாடலை பலரும் பல்வேறு விதமாக ரசித்தார்கள். ஆனால் அப்பாடல் துருக்கியில் காப்பி அடிக்கப்பட்டுள்ளது. துருக்கி பாடகி அதியே(Atiye) என்பவர் பாடிய வெர்ஷனில் ஊ சொல்றியா பாடலின் ஒற்றுமைகள் நிறைய இருக்கிறது” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “நான் அந்த பாடகி மீது வழக்கு தொடர்வது பற்றி யோசித்து வருகிறேன். அதே சமயம் சர்வதேச அளவில் நமது இசை கவனம் பெற்றிருப்பதை நினைத்து பெருமையும் கொள்கிறேன்” என்றார். துருக்கி மற்றும் ஆங்கிலத்தில் பாடல்களை பாடி வருபவர் அதியே. இவர் ‘அன்லயானா’ என்ற தலைப்பில் 2024ஆம் ஆண்டு ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டிருந்தார். அந்த பாடலை தற்போது கேட்ட பலரும் இது ‘ஊ சொல்றியா’ பாடல் போல் உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Devi Sri Prasad hollywood pushpa singer
இதையும் படியுங்கள்
Subscribe