/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/227_23.jpg)
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் நேற்று(27.09.2024) வெளியான படம் ‘தேவரா’. இப்படத்தை மிக்கிலினேனி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா ஆகியோர் தயாரித்திருக்க பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாகவும் பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் நாளான நேற்று ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் வழக்கத்திற்கு மாறாக ஆந்திராவிலுள்ள திரையரங்கம் ஒன்றில் ஜுனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் சிலர் ஆடு வெட்டி அதன் இரத்தத்தை ஜுனியர் என்.டி.ஆரின் பேனர் மீது தெளித்து கொண்டாடினர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சிலர் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் ரூ.172 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்து வெளியான படங்களில் இப்படம் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ராம் சரணுடன் இனைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் முதல் நாளில் மட்டும் ரூ.223 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)