/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/118_37.jpg)
தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானிஆகியோரது நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான படம் அழகி. உதய கீதா தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அதிக நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்து 2004ஆம் ஆண்டு டிலீஸ் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இப்படம் 22 வருடம் கழித்து இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதையொட்டி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தேவயானி, “22 வருஷம் கழித்து எங்க படம் ரிலீஸாவது ரொம்ப சந்தோஷமான தருணம். இது ஒரு அதிசயம். இது நடக்கும் என நினைத்ததே கிடையாது. ஆனால் ஏதோ ஒரு மேஜிக் நடந்துக்கிட்டு இருக்கு. அப்போவும் நடந்திருக்கு. இப்பவும் நடக்குது. இதை நாம் கொண்டாட வேண்டும்.
இதே போல் அழகான படங்களை ரீ ரிலீஸ் செய்து இந்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் ஏதாவது அவுங்க கற்றுக் கொள்ள முடியும். தங்கர் பச்சானுடன் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளேன். அவருக்கு நன்றி” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)