தமிழ் சினிமாவில் கானா என்று சொன்னாலே ரசிகர்களின் மனதில் சட்டென தோன்றுவது தேவா என்ற பெயர். தமிழ், மலையாளம், தெலுங்கு என 375 படங்களுக்கு மேல் கானா மட்டுமல்லாது, மெலடி, வெஸ்டர்ன், ஃபோக் என பல்வேறு விதமாக இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் ரசிகர்களை மகிழ்வித்தார்.
இவரது இசையில் பொற்காலம் படத்தில் இடம்பெற்ற 'தஞ்சாவூருமண்ணு எடுத்து' பாடல் சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாடல். அவரது இறுதிசடங்கில் அவரின் வேண்டுகோலுக்குஇ இனங்க இந்த பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தேவாவிற்கு சிறப்பு கௌரவமாக பார்க்கப்படுகிறது. அந்தளவு வெளிநாடு வரை தேவாவின் இசை ரசிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அண்மையில் தேவா ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு மரியாதை அவருக்கு வழங்கப்பட்டது. அதாவது ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனடிப்படையில் அவர் போன போது மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அவைத்தலைவர் இருக்கையில் உட்கார வைக்கப்பட்டு பின்பு செங்கோலும் வழங்கப்பட்டது. இது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த தேவா, ஆஸ்திரேலிய அரசு மற்றும் அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.