"என் படத்தில் தேவா சார் பாடியுள்ளது பெரும் பாக்கியம்" - மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி

Deva has sung song master mahendran Amigo garage film

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன், ‘விழா’, விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்தில் இவரின்நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர்பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் அமிகோ கரேஜ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பீப்புல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்க, பாலமுரளி பாலு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'அமிகோ கரேஜ்' படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாஸ்டர் மகேந்திரன், "தமிழ்சினிமாவின் பல சூப்பர்ஹிட் பாடல்களுக்கு தேவா சார் மெட்டு அமைக்கையில் என்னை மடியில் உட்காரவைத்து பாடல்களை உருவாக்கினார். இப்போது நான் நாயகனாக நடிக்கும் 'அமிகோ கரேஜ்'படத்தில் தேவா சார் பாடியுள்ளார் என்பது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். இறைவனுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

deva master mahendran
இதையும் படியுங்கள்
Subscribe