Skip to main content

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இணையும் கார்த்தி 

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
karthi

 

 

 

'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தாக வெளியாகவுள்ள படம் "தேவ்". அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். தீரன் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ்  இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், வம்சி ரவி ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், 'தேவ்' படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்