Advertisment

வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மீண்டும் செல்லும் கார்த்தி மற்றும் படக்குழுவினர்  

karthi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடித்து அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் 'தேவ்' படம் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகி வருகிறது. ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தேவ் படக்குழுவினர் குலு மணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்பிவந்த நிலையில் தற்போது கார்த்தி மற்றும் படக்குழு மீண்டும் விடுபட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக குலுமணாலி மற்றும் இமைய மலைக்கு நாளை செல்கின்றனர். அங்கு தொடர்ந்து 12 நாட்கள் படப்பிடிப்பு நடந்து நிறைவு பெற்ற பிறகு போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் துவங்குகிறது. இதற்கிடையே இப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார். மேலும் இப்படத்தின் பஸ்ட்லுக் விரைவில் வெளியாகவுள்ளது.

karthi
இதையும் படியுங்கள்
Subscribe