style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'கடைக்குட்டி சிங்கம்' வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி அடுத்ததாக 'தேவ்' படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த காதல் படமாக உருவாகும் இப்படத்தில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் 'தேவ்' படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.